ஈரோடு அருகே தவெகவுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விவசாயிகள் போராட்டம்
ஈரோடு: காஞ்சிக்கோயில் அருகே பயிர்கடனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கான வேளாண் பயிர்கடனை முழுமையாக ரத்து செய்ய கோரி விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோயிலில் தற்போது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகே திரண்டு இருக்கிறார்கள். விவசாயிகள் தங்களுக்கான பயிர்கடனை முழுமையாக ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவெக பொறுத்தவரை தேர்தலுக்கு முன்பாக ஆட்சி அமைக்கும் போது முழுமையாக பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதிகள் உத்தரவாதமாக அளிக்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, சிறு குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 இருந்து ரூ.75,000 ஆக பயிர்க்கடன் தள்ளுபடி சற்று உயர்த்தபட்டு இருக்கிறது. முழுமையாக இந்த பயிர்கடனை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறு குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் ரத்து மற்றும் பெரு விவசாயிகளுக்கு 50% பயிர்க்கடன் ரத்து என்ற தேர்தல் வாக்குறுதியை உடனடியாக முதலமைச்சர் அமல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.