Select Location
All Locations
State
Region
City / District
தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக சட்டப்பேரவையில் தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விசாரணையை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களை வென்றபோதிலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை 118 இடங்களைப் பெறவில்லை.

இதனையடுத்து, மே 13 ஆம் தேதியில் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அதிமுகவில் அதிருப்தியடைந்து வெளியேறிய எம்எல்ஏ 25 பேரும் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவளித்தனர். இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததாக கே.கே. ரமேஷ் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் வி. மோகனா அமர்வில் இன்று (ஜூன் 19) விசாரணைக்கு இந்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

எந்த நம்பகமான ஆதாரமும் இல்லாத தெளிவற்ற, தவறான குற்றச்சாட்டுகளைக் கொண்டதாகப் புகார் மனு இருப்பதாக உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Source : Dinamani

1 hour ago

Home Flash News