Select Location
All Locations
State
Region
City / District
LIVE
தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!

தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 2025 - 26 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து, கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 2026-27 கல்வியாண்டில் நான்காம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை வரும் ஜூன் 1-ஆம் தேதியும், ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை ஜூன் 4-ஆம் தேதியும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது. கோடை வெய்யில் காரணமாக பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். பின்னர், தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஜூன் 4-ஆம் தேதி (வியாழக்கிழமை) திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று காலை திறக்கப்பட்டது. புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகளுக்கு திரும்பும் மாணவா்களின் நலன், பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும், மாணவா்களுக்கு வழங்குவதற்காக பள்ளிகளில் பாடப் புத்தகங்கள், சீருடைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Source : Dinamani

1 hour ago

Home Flash News