Select Location
All Locations
State
Region
City / District
“ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு”- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

“ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு”- அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் முறை வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், “ஆகஸ்ட் 17 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு முறை அமல். எங்கிருந்தாலும், முழுவதும் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யலாம்.பத்திரப்பதிவு துறையில் இடைத்தரகர்களை அனுமதிக்க மாட்டோம். ஆன்லைன் முறையிலேயே அனைத்து பதிவுகளையும் மேற்கொள்ள முடியும். ஆன்லைன் முறையால் 30% மக்கள் பத்திரப்பதிவு அலுவலகம் வருவது குறையும். ஆன்லைன் பத்திரப்பதிவு முறையை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார். முதல்முறை நிலம், வீடு வாங்குவோருக்கு அவற்றை விற்பவர்கள் ஆன்லைனில் பத்திரப்பதிவு செய்யும் anywhere registration முறையும் அன்று முதல் அமலாகும். நிலங்களுக்கான வழிகாட்டுதல் மதிப்பை அதிகரிப்பது குறித்து குழு அறிக்கை அளித்துள்ளது. இதுகுறித்து முதல்வரிடம் ஆலோசித்துள்ளோம்.” என்றார்.

Source : Smacy News

6 hours ago

Home Flash News