Select Location
All Locations
State
Region
City / District
ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

ஆப்கனுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்ப்பு!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் திடலில் நாளை (ஜூன் 20) நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசிப் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்திலிருந்து குணமடைந்துவிட்ட ஹர்ஷித் ராணா, இந்திய அணியுடன் இணைந்து சென்னை சேப்பாக்கம் திடலில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்ஷித் ராணா.

Source : Dinamani

1 hour ago

Home Flash News