ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ள டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
சென்னை: ஜூலை 4, 5ம் தேதி நடைபெறவுள்ள டெட் தேர்வு தாள் 1, தாள் 11 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் தேர்வர்கள் இன்று முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் ஜூன் 22 முதல் 30 வரை சிறப்பு முகாமில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 4,5ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரிய மற்றும் பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட்) தேர்ச்சி பெறுவதை உச்சநீதிமன்றம் கட்டாயமாக்கியது. மேலும், இதுவரை தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் தேர்வெழுதி தேர்ச்சி பெறவும் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 1.75 லட்சம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்களின் வசதிக்காக 3 சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு ஜூலை 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.