ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் பணியிடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மாதம் ஜோசப் விஜய் பதவியேற்றார். புதிதாக ஒரு அரசு பதவிக்கு வரும்போது நிர்வாகங்களில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்வது வழக்கம். குறிப்பாக அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விபரம் பின்வருமாறு:
* சீமா அகர்வால் - தீயணைப்பு ஆணையத் தலைவர்
* தினகரன் - ஆயுதப்படை ஏடிஜிபி
* சந்தீப் மிட்டல் - சீருடை பணியாளர் வாரிய தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.