Select Location
All Locations
State
Region
City / District
அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்; பிரதமர் மோடி வரவேற்பு..!!

அமெரிக்கா- ஈரான் அமைதி ஒப்பந்தம்; பிரதமர் மோடி வரவேற்பு..!!

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் சுவிட்சர்லாந்தில் ஜூன் 19ம் தேதி கையெழுத்தாக உள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:உலகம் முழுவதும் கடுமையான பொருளாதாரச் சீர்குலைவை ஏற்படுத்தியதும், பல நாடுகளில் உயிரிழப்புகளுக்குக் காரணமானதுமான மேற்கு ஆசியப் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை நான் வரவேற்கிறேன்.

இந்தப் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தப்படுவது அப்பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும், தடையற்ற கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகத்தை உறுதி செய்யவும் உதவும் என்று இந்தியா நம்புகிறது. மீதமுள்ள விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி ஒரு நிலையான இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Source : Smacy News

1 hour ago

Home Flash News