Select Location
All Locations
State
Region
City / District
‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை: ஆவின் விளக்கம்

‘கிரீன் மேஜிக்’ பால் விநியோகம் குறைக்கப்படவில்லை: ஆவின் விளக்கம்

சென்னை: ஆவின் க்ரீன் மேஜிக் பால் விநியோகம் குறைக்கப்படவோ நிறுத்தப்படவோ இல்லை என்றும், வழக்கம்போல் விநியோகம் செய்யப்படுவதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் வகையான ‘Green Magic’ பாலின் விநியோகம் நிறுத்தப்பட்டதாகவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும் - Green Magic பால் உட்பட - தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்து வருகிறது என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் நிறுத்தப்படவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்படவோ இல்லை. நுகர்வோர்களின் தேவைகளுக்கு ஏற்ப பால் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்பி குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆவின் Green Magic பால் வழக்கம்போல எந்தவித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, ஆவின் பால் உற்பத்தியை முடக்குவது, மக்கள் ஆரோக்கியத்தின் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல். அதிக உற்பத்தி செலவின் காரணமாக, பெரும்பாலான நடுத்தர மக்கள் பயன்படுத்தும் ஆவினின் ‘கிரீன் மேஜிக்’ பால் பாக்கெட்டுகளின் உற்பத்தி படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அப்பால் பாக்கெட்டுகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஆவின் நிர்வாகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

Source : Smacy News

2 hours ago

Home Flash News