ரசிகர்கள் ஷாக்..!! ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரிலிருந்து விராட் கோலி விலகல்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். தொடையில் ஏற்பட்ட காயத்தால் அவர் விலகி இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முக்கிய பங்கு வகித்தார். அவர் 16 போட்டிகளில் 1 சதம், 5 அரை சதத்துடன் 675 ரன்கள் எடுத்தார்.
காயம் காரணமாக அவர் போட்டியை தவறவிடுவது மிகவும் அரிதானது. ஏற்கனவே, ரோகித் சர்மா உடல் தகுதியுடன் இல்லை. முழு உடல் தகுதி பெற்றால் மட்டுமே அவர் ஆப்கானிஸ்தான் போட்டியில் ஆடுவார்
ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:
கில் ( கேப்டன்), ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னுர் பிரார், ஹர்ஷ் துபே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது.