Select Location
All Locations
State
Region
City / District
சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

சவுக்கு சங்கர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: பிரபல யூடியூப​ரான சவுக்கு சங்​கர் மீதான கொலை முயற்சி வழக்​கில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்ய இடைக்​காலத்​தடை விதித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சவுக்கு மீடியா சிஇஓ-​வான யூடியூபர் சவுக்கு சங்​கர் மீது சைதாப்​பேட்டை மற்​றும் ஆதம்​பாக்​கம் போலீ​ஸார் பதிவு செய்​திருந்த இரு குற்ற வழக்​கு​களில் அவருக்கு உயர் நீதி​மன்​றம் நிபந்​தனை ஜாமீன் வழங்​கி​யிருந்​தது.

ஆனால். அவர் ஜாமீன் கெடு முடிந்​த​ பிறகும் நீதி​மன்​றத்​தில் சரணடைய​வில்லை என்​ப​தால் அவரை போலீ​ஸார் ஆந்​தி​ரா​வில் வைத்து கடந்த ஏப்​.8-ம் தேதி கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு வந்​தனர். போலீஸ் வாக​னம் புழல் அருகே வந்​த​போது மற்​றொரு வாக​னத்​தில் அங்கு வந்த 4 பேர் போலீ​ஸாருடன் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டு, அவர்​கள் மீது கற்​களை வீசி தாக்​குதல் நடத்​தி​ய​தாக கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக சவுக்கு சங்​கர் உள்​ளிட்​டோர் மீது கொலை முயற்சி உட்பட பல்​வேறு பிரிவு​களின்​கீழ் போலீ​ஸார் வழக்​குப்​ப​திவு செய்​தனர். தன் மீது போடப்​பட்​டுள்ள இந்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்​டும் என கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் சவுக்கு சங்​கர் மனு தாக்​கல் செய்​திருந்​தார். இந்த மனு நீதிபதி எம்​.நிர்​மல்​கு​மார் முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது இந்த வழக்​கில் பதிலளிக்க அரசு தரப்​பில் அவகாசம் கோரப்​பட்​டது. அதையேற்ற நீதிப​தி, விசா​ரணையை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்​ளார்.அது​வரை இந்த வழக்​கில் போலீ​ஸார் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யக்​கூ​டாது என இடைக்​கால தடை வி​தித்​துஉத்​தர​விட்​டுள்​ளார்​.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News