Select Location
All Locations
State
Region
City / District
தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் 91,369 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

தமிழகம் முழுவதும் நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரே நாளில் 91,369 நிலுவை வழக்குகளுக்கு தீர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் நடைதில் 91,369 நிலுவை வழக்கு பெற்ற தேசிய லோக் அதாலத்களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.664.47 கோடி இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட் டுள்ளது.

பொதுமக்களின் நீண்ட கால வழக்குகளுக்கு விரைவாகவும், கட்டணமின்றியும் தீர்வு காணும் நோக்கில் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய லோக் -அதாலத் தமிழகம் முழு வதும் நேற்று நடைபெற்றது. மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும். உயர் நீதி மன்ற தலைமை நீதிபதியுமான எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுறுத் தலின்படி நடத்தப்பட்ட இந்த லோக்-அதாலத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 அமர்வுகளும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 3 அமர்வுகளும் ஏற் படுத்தப்பட்டு நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.டி.ஆஷா, என்.செந்தில்குமார், ஜி.அருள் முருகன் மற்றும் முன்னாள் நீதிபதி பி.கோகுல் தாஸ் ஆகியோர் தலைமையிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் பி.பி.பாலாஜி, பி.வடமலை, பி.தனபால் ஆகியோரது தலை மையிலும் நிலுவை வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதேபோல மாவட்ட மற்றும் தாலுகா அளவில் மொத்தம் 506 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 91,369 நிலுவை வழக்குகளுக்கு நேற்று ஒரே நாளில் தீர்வு காணப்பட்டன.

இதன் மூலம் மொத்தம் ரூ.664 கோடியே 47 லட்சத்து 21 ஆயிரத்து 308-க்கான காசோலைகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்த லோக்-அதாலத் ஏற்பாடுகளை மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான எஸ்.பாலகிருஷ்ணன் தலைமையில் அந்தந்த மாவட்ட நீதிபதிகள் செய்திருந்தனர்.

இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக்- அதாலத்தில், உயர் நீதிமன்ற நீதிபதியும் மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உறுப்பினருமான ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, தீர்வு காணப்பட்ட வழக்குகளில் பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.

Source : Hindu Tamil

2 hours ago

Home Flash News