Select Location
All Locations
State
Region
City / District
தகுதி நீக்கம் இல்லை..! மன்னிப்பு கேட்ட 21 பேர் தப்பினர்; 4 எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை: சபாநாயகர்...!

தகுதி நீக்கம் இல்லை..! மன்னிப்பு கேட்ட 21 பேர் தப்பினர்; 4 எம்எல்ஏ.,க்கள் மீது நடவடிக்கை: சபாநாயகர்...!

சபாபநாயகர் ஜேசிடி பிரபாகர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் தகுதி நீக்கம் இல்லை. மன்னிப்பதாக கடிதம் அளித்த இபிஎஸ் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேரும் அந்த கட்சியின் கொறடா உத்தரவை மீறிய காரணத்தால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கை தொடங்கியுள்ளது. எம்எல்ஏக்கள் 4பேர் மீதான நடவடிக்கை முடிந்ததும் அறிவிப்பேன்.

21 எம்எல்ஏக்களின் வருத்தத்தை ஏற்றுக் கொண்டதாக கூறிய இபிஎஸ் பரிந்துரையின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவ்வாறு சபாநாயகர் கூறினார். இதனால், எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 21 பேர் கட்சித்தாவல் தடைச்சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பினர். சபாநாயகர் அறிவிப்பின்படி, ராஜினாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்த சத்ய பாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா ஆகியோர் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News