Select Location
All Locations
State
Region
City / District
மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!

மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை எம்.பி. இடத்திற்கு தவெக ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சோ்ந்த மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம், சட்டப்பேரவைத் தோ்தலில் வென்றதால் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

ஜூன் 18-ஆம் தேதி மாநிலங்களவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளும் தவெக, கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு அந்த ஒரு இடத்தை ஒதுக்கியது. இந்தப் பதவிக்கு காங்கிரஸ் சாா்பில் பிரவீண் சக்ரவா்த்தி வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும் 14 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனுவில் மட்டுமே 10 எம்.எல்.ஏ.க்கள் கையொப்பம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சட்டப்பேரவைச் செயலர் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

இதில் பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் ஆதரவு இல்லாததால் மற்றவர்களின் வேட்புமனு நிராகரிக்கப்படவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை மறுநாள்(ஜூன் 11) வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம். அதன்பிறகு மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீண் சக்ரவர்த்தி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Dinamani

1 hour ago

Home Flash News