Select Location
All Locations
State
Region
City / District
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் மாயம்

அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் பல கோடி ரூபாய் மாயம்

இது குறித்து முன்​னாள் முதல்​வ​ரான அகிலேஷ் தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: அயோத்தி ராமர் கோயில் அறக்​கட்​டளை மூலம் பக்​தர்​களிட​மிருந்து நன்​கொடை​யாக பெறப்​பட்ட கோடிக்​கணக்​கான ரூபாய் காணா​மல் போன​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. இந்த விவ​காரம் கோயில் அறக்​கட்​டளைக்​கும் ஒரு தர்​மசங்​கட​மான சூழலை உரு​வாக்​கி​யுள்​ளது. இது குறித்து இது​வரை யாரும் ஏன் விளக்​கம் அளிக்க முன்​வரவில்லை? இதற்கு பதிலளிக்​காமல் ராமர் கோயில் அறக்​கட்டளை மவுன​மாக உள்​ளது. இது ராம பக்​தர்​களுக்கு ஆழ்ந்த கவலை​யளிக்​கும் விஷ​யம். இதில் வெளிப்​படைத்​தன்மை தேவை. லட்​சக் ​கணக்​கான பக்​தர்​களின் நம்​பிக்​கையோடு நேரடி​யாகத் தொடர்​புடைய விவ​காரம் என்​ப​தால், இதுகுறித்து நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து நீதி விசா​ரணை நடத்த வேண்​டும். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்.

கோயில் அறக்​கட்​டளைக்கு கடந்த 2025- 26 நிதி​யாண்​டில் சுமார் ரூ.220.81 கோடி வரு​வாய் கிடைத்​துள்​ளது. இதில் பெரும்​பகுதி பக்தர்​களின் நன்​கொடை மற்​றும் காணிக்கை மூல​மாகவே கிடைத்​துள்​ளது. இதில் ‘ராம் லல்​லா' (குழந்தை ராமர்) சன்​ன​தி​யில் உள்ள காணிக்கைப் பெட்​டிகள் மூலம் அதி​கபட்​ச​மாக ரூ.54.79 கோடி வசூலாகி​யுள்​ளது. ஏப்​ரல் 2025 முதல் பிப்​ர​வரி 2026 வரை, நன்​கொடை கவுண்ட்​டர்​கள் மூலம் ரூ.18.88 கோடி​யும், இணை​ய வழி நன்​கொடை மூலம் ரூ.8.33 கோடி​யும் கிடைத்​துள்​ளன. வெளி​ நாட்டு பங்​களிப்பு ஒழுங்​கு ​முறைச் சட்​டத்​தின் கீழ் வெளி​நாடு​களில் இருந்து ரூ.78 லட்​சம் நன்​ கொடை​யாகப் பெறப்பட்டுள்ளது. நன்​கொடை தவிர, வங்கி வைப்​புத்​தொகை மீதான வட்டி மூலம் அறக்​கட்​டளைக்கு சுமார் ரூ.138 கோடி வருவாய் கிடைத்​துள்​ளது. இதன் மூலம் அதன் மொத்த வரு​வாய் ரூ.220 கோடியைத் தாண்​டி​யுள்​ளது. இது​போல், ராமர் கோயில் அறக்​கட்​டளை மீது புகார்​கள் எழு​வது முதன் ​முறை அல்ல. இதற்கு முன், அயோத்​தி​யில் நிலம் வாங்​கிய​தில் பல கோடி ரூபாய் முறை​கேடு நடந்​த​தாக அகிலேஷ் மற்​றும் பிற எதிர்க்கட்சித் தலை​வர்​கள் குற்​றம் சாட்​டி​யிருந்​தனர். அந்​தக் குற்றச்​சாட்​டு​களை அறக்​கட்​டளை​யும் அதன் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ரா​யும் தொடர்ந்து மறுத்து வந்​தனர். இந்​நிலை​யில், மீண்டும் கோடிக்​ கணக்​கான ரூபாய்​ காணா​மல்​ போன​தாக புகார்​ எழுந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Source : Hindu Tamil

1 hour ago

Home Flash News