Select Location
All Locations
State
Region
City / District
ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலை

ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலை

நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவரது கட்சியில் சேர அழைப்பு விடுத்ததாக அண்ணாமலை கூறியுள்ளார்.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 2020 ஆம் ஆண்டு கட்சி தொடங்கியபோது அவரது கட்சியில் சேர அழைத்தார். நான் ரஜினியிடம் பல முறை பேசியுள்ளேன். ரஜினி அழைத்தபோதும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன். ரஜினி, அந்த கரோனா நேரத்தில் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் அடையாளம், பாரம்பரியத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்போதுமே நான் பெருமைமிகு இந்தியன், பாஜகவுடனான கருதத்து வேறுபாடுகள் 18 மாதங்களாக நீடித்தன. கடந்த டிசம்பர் மாதமே கட்சியில் இருந்து விலகுவதாக பாஜகவிடம் தெரிவித்துவிட்டேன். சட்டப்பேரவைத் தேர்தலை முடித்துவிட்டு ராஜிநாமா செய்ய கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படியே இதுவரை செயல்பட்டு வந்தேன்" என்று பேசினார்.

Source : Dinamani

1 hour ago

Home Flash News